Movie prime

ரேஷன் அட்டை இணைய கட்டண வசதி தாமதம்!!

 
ration card
புதிய ரேஷன் அட்டை மற்றும் நகல் அட்டைகளை, தபாலில் பெறுவதற்கான கட்டணத்தை, இணையதளத்தில் செலுத்தும் வசதியை ஏற்படுத்த, உணவுத்துறை தாமதம் செய்து வருகிறது.
online payment
ரேஷன் அட்டையை தொலைத்தவர்கள், 'டூப்ளிகேட்' எனப்படும் நகல் அட்டையை பெறலாம். அதை பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அலுவலகத்தில், ₹20 கட்டணம் செலுத்தி, நகல் அட்டையை வாங்கலாம். ஆனால், பல அலுவலகங்களில் வழங்குவதற்கு தாமதம் செய்யப்படுகிறது.

தொடர்ந்து, புதிய அட்டை மற்றும் நகல் அட்டைகளை, பயனாளிகள் வீடுகளுக்கே தபாலில் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நகல் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, ₹20 மற்றும் அஞ்சல் கட்டணம், ₹25 என, மொத்தம் ₹45 இணையதளத்தில் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ration_shop
இதுவரை, இணைய தளத்தில் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கப்படவில்லை. இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரிகள் மென்பொருள் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது, இந்த பணி முடியும் தருவாயில் இருப்பதால், விரைவில் இணையதளத்தில் கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்படும் என்று கூறுகின்றனர்.