Movie prime

கேரளாவில் மழை குறைந்தாலும் தொடர்ந்து நீடிக்கும் ரெட் அலர்ட்!!

 
idukki dam
கேரள மாநிலத்தில் மழை சற்று குறைந்தாலும் 5 அணைகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
vaigai river
முன்னர் 8 மாவட்டங்களில் கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டு தற்போது, ஆரஞ்சு அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
rain
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை உள்ளிட்ட 5 அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலத்தின் அனைத்து பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.