Movie prime

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! இந்திய வானிலை ஆய்வு மையம்!!

 
rain
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.
rain
தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் அதிமிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
மேலும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது