Movie prime

நாளை ரெட் அலர்ட்!! நீலகிரி மாவட்டத்தில் தயார் நிலையில் மீட்பு குழுவினர்!!

 
nilagiri
நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இதனால் தமிழக அரசு பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
rain
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழையும், நாளை மிக கனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் இன்று ஆரஞ்சு அலார்ட்டும் நாளை ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்காக உபகரணங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது.
rain
மேலும், தீயணைப்புத்துறை வீரர்கள் ஒத்திகை உதகையில் உள்ள தலைமை தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தகவலை, தீயணைப்பு துறை நிலை அலுவலர் பிரேமானந்தன் கூறினார். மேலும் கனமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை துரிதமாக சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க மரங்களுக்கு கீழே, ஆறுகள் மற்றும் தடுப்பு சுவரின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.