Movie prime

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., திடீர் மரணம்!! ஒடிசா முதல்வர் இரங்கல்!!

 
bijay ranjan singh barika
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வரும் பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
bijay ranjan singh barika
கடந்த சில வாரங்களாக பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா, உடல்நிலை பாதிப்படைந்த நிலையில், புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரஞ்சன் சிங்கின் திடீர் மறைவுக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
rip
தற்போது, மறைந்த எம்.எல்.ஏ., பிஜய் ரஞ்சன் சிங் பரிஹாவின் உடல் அவரது சொந்த ஊரான படம்பூரில் இன்று நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொடர்ன்களும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.