Movie prime

பள்ளிக்கல்வித்துறை அதிரடி!! அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் ஓராண்டு கட்டாயப் பணி!!

 
palikalvithurai
தமிழகத்தில் அனைத்து அரசு பணிகளில் பணிபுரிபவர்களின் துறை மாற்றப்படுவது வழக்கம். ஆசிரியர் பணியை தவிர மற்ற அனைத்து அரசு பணியாளர்களுக்கு மாவட்டங்கள், துறைகளை மாற்றப்படுவதுண்டு. இந்த பனி மாற்றங்களுக்கு ஆசிரியர் பணி மட்டும் விதிவிலக்காக இருந்து வந்தது.
teachers
இந்நிலையில், மலைப்பகுதி அதிகம் உள்ள 7 மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில்  கட்டாயம் ஓராண்டு காலம் பணிபுரிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதிகளில் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மலைப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயன் பெற ஏதுவாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
School leave
மலைப்பகுதிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருவதால் அங்கு ஓராண்டு கட்டாயப் பணி என்ற உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,  பதவி உயர்வு பணியிடங்களை  முதலில் மலைப்பகுதிகளில் நிரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.