அதிர்ச்சி!! 10 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று!! தானும் தற்கொலை!!
Aug 11, 2022, 07:23 IST

10 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்டு பெண் மருத்துவர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயண் – சைமா என்ற தம்பதி பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஆராதனா என்ற மகள் உள்ளார்.
நாராயணன் - சைமா இருவருமே பல் மருத்துவர்களாக உள்ளனர். நாராயணன் தான் நடத்தி வரும் பல் மருத்துவமனைக்கு பணிக்கு சென்றிருந்தார். ஆனால் தனது மனைவி வீட்டில் இருந்து வெகு நேரமாகியும் மருத்துவமனைக்கு வரவில்லை. அவரது செல்போனுக்கு பல முறை நாராயணன் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.

பலமுறை அழைத்தும் சைமாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால், நாராயணன் சந்தேகம் அடைந்து, வீட்டிற்கு சென்று பார்த்த போது, படுக்கை அறையில் தனது மனைவியும், மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளதை, கண்டு கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தற்கொலை செய்திருக்க கூடும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

நாராயணன், சைமா இடையே குடும்ப பிரச்சனையால் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சைமா தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக இவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.