Movie prime

அதிர்ச்சி!! காரைக்காலில் 144 தடை!! அதிகரிக்கும் காலரா நோய் பரவல்!!

 
karaikal
காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக நேற்று முதல் பொது சுகாதார அவசரநிலையை, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்தது. கடந்த சில வாரங்களாக, காரைக்காலில் வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
hospital
இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், குடிநீர் எடுக்கும் பகுதி, குடிநீர் தொட்டி மூலம் விநியோகிக்கும் பகுதி, குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் செல்லும் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிலரையும் பரிசோதித்த போது, அது காலராவுக்கான அறிகுறியாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் காலரா தொற்று அதிகரிப்பு காரணமாக நேற்று முதல் பொது சுகாதார அவசரநிலையை, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. காரைக்கால் பகுதியில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய் தொற்று அதிக அளவில் பதிவாகி வருகிறது. மேலும் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. மேலும், சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.
cholera
மேலும் தற்போது, தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.