Movie prime

அதிர்ச்சி!! ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 8 வயது சிறுவன்!!

 
bore hole
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பீட்டல் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு நானக் சவுகான் என்பவரது பண்ணையில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். ஆனால் அதில் தண்ணீர் வராததால் அதனை பயன்படுத்தவில்லை.
bore hole rescue
அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
bore hole rescue
ஆனால் சிறுவன் சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
rescue
கிணற்றை மூடி விட்டோம், ஆனால் சிறுவன் எப்படி மூடியை அகற்றினான் என்று தெரியவில்லை என்று பண்ணையின் உரிமையாளர் நானக் சவுகான் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.