அதிர்ச்சி!! 16 வயது மாணவிக்கு பள்ளியில் திடீர் ஹார்ட் அட்டாக்!! உயிரிழந்த சோகம்!!
Updated: Jan 28, 2023, 08:13 IST

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இந்தூரில் உள்ள உஷா நகர் பகுதியை சேர்ந்தவர், விரிந்தா திரிபாதி. 16 வயதாகும் விருந்த அருகே உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை அன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற விரிந்தா, குடியரசு தின விழாவின் ஒத்திகை நிகழ்வில் பங்கேற்ற பின்னர் வகுப்பிற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மதியம் 12 மணியளவில் திடீரென மயங்கி சரிந்து விழுந்துள்ளார். பதறிய வகுப்பு ஆசிரியை மனைவியை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து மருத்துவர்கள், மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாகவும், காரணம் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பள்ளி மற்றும் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தூரை சேர்ந்த முஸ்கான் என்ற சமூக தொண்டு நிறுவனம் மாணவியின் பெற்றோரிடம் கண் தானத்திற்கு கோரிக்கை வைத்தனர். அந்த நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் அவரது கண்களை தானம் செய்தனர்.

மேலும், குளிர் காலத்தில் இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால், அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக, உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.