Movie prime

அதிர்ச்சி!! முதலமைச்சரை தொடர்ந்து பால்வளத் துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதி!!

 
tn milk minister

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது, பால்வளத் துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


tn milk minister
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தனது முகநூல்  பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், நேற்று முதல் உடல் சோர்வுற்று இருந்ததாகவும் பின்னர் பரிசோதனை செய்ததில் COVID-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது அவர் அடையாறு அரசு பங்களாவில்  சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.