அதிர்ச்சி!! சுங்கச்சாவடி தூண் மீது ஆம்புலன்ஸ் மோதல்!! ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி!!
Jul 21, 2022, 06:34 IST

பைந்தூர் அருகே சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 4 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவரில் இருந்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் சென்றது.
உடுப்பி, பைந்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சிரூர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, டிரைவர் ஆம்புலன்ஸ் பிரேக்கை பிடித்து வேகத்தை குறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இதை பார்த்து அதிர்ந்த சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தடுப்பு வேலியை ஹரி உள்ளார். மேலும் மற்றொருவர், சுங்கச்சாவடி அருகே படுத்திருந்த மாட்டை விரட்டி உள்ளார். ஆனால் சாலையில் மழைநீர் தேங்கி இருந்ததால் ஆம்புலன்ஸ் தறிகெட்டு ஓடி ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடி தூண் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்புலன்ஸ், தடுப்பு வேலியை கரிய சுங்கச்சாவடி ஊழியர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்சின் பின்புற கதவு திறந்து உள்ளே இருந்த 4 பேர் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து பலியானார்கள். மேலும், இந்த விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர், ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். இதைப் பார்த்து அதிர்ந்த அங்கிருந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பைந்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான நோயாளி உள்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பலியானவர்கள் உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவர் அருகே அடகேரி பகுதியை சேர்ந்த லட்சுமண நாயக், அவரது மனைவி ஜோதி நாயக் மற்றும் உறவினர்கள் மகாதேவ நாயக், லோகேஷ் நாயக் ஆகியோர் என்பது தெரியவந்தது.