Movie prime

அதிர்ச்சி !! உத்தராகண்டில் பனிச்சரிவு!! 32 பேர் பலி!!

 
utharakhand hills
உத்தரகாண்ட் மாநிலம், கர்வாவில் உள்ள கங்கோத்ரி மலைத்தொடரின் திரௌபதி தண்டா என்ற பகுதியில் இன்று நேற்று 9 மணி அளவில் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்திலிருந்து 34 பயிற்சியாளர்கள் மற்றும் 7 பயிற்றுனர்கள் உட்பட மொத்தம் 41 பேர் பேர் கொண்ட குழு ஒன்று அந்த பகுதியில் உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
rescue team
அந்த குழுவினர், அனைவரும் பனிச்சரிவில் சிக்கி உள்ளனர். இது தொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  மாவட்ட நிர்வாகத்தினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் தனித்தனியே  மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கியவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
rescue team
இந்நிலையில், காயமடைந்த மலையேறும் அனைவரும் ஹெலிபேட் அமைந்து இருக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மீட்பு படையினர் முழு வீச்சில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.