Movie prime

அதிர்ச்சி!! மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி!! ஆரணி ஓட்டலில் அதிர்ச்சி!!

 
cockroach briyani
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் ஒரு தனியார் அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்ற நபரும் அவரது மனைவியும் மட்டன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
briyani
மட்டன் பிரியாணி சாப்பிட்ட போது பிரியாணியில் கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த மூர்த்தி தம்பதியினர், கடையின் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வாதிடும் வீடியோ தற்போது ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
non veg
ஏற்கனவே சிக்கன் பிரியாணி, சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவனும் ஒரு சிறுமியும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது, பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அசைவ பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.