Movie prime

அதிர்ச்சி!! பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!!

 
dharshan dharmaraj

உலக தமிழர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்று காலமானார். இலங்கை திரைப்பட நடிகரான இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்து, உலக தமிழர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர்.
darshan dharmadurai
திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நேற்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட 'பிரபாகரன்', 'சுனாமி' உட்பட 25 க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா துறையில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான 'பிரபாகரன்' எனும் இரு மொழி திரைப்படத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாகப் நடித்து புகழ் பெற்றார்.
dharsan dharmadurai
இவர் நடிப்பில் வெளியான 'இனி அவன்' திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் 'கான்' திரைப்பட விழாவில்  2012 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழி உப தலைப்புக்களுடன் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
rip
தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  தர்ஷன் தனது 41 வயதில் காலமானார். இவரது இறப்புக்கு  திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.