Movie prime

அதிர்ச்சி!! ஹோட்டல் அறையில் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

 
akansha mohan
நடிகை  அகன்ஷா மோகன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருகிறார். 30 வயதாகும் இவர் மாடலிங் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியான ‘சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
akansha mohan
மும்பை அந்தேரியில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹோட்டலில் தங்கி இருந்த இவர் நேற்று வெகு நேரமாகியும் அறையில் இருந்து வெளியே சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் ஹோட்டலுக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அந்த அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
thokku
அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், ‘எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல, யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் நடிகையின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.