Movie prime

அதிர்ச்சி!! பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்!!

 
raju srivatsava
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 58 வயதான ராஜூ, கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளார்.
rajy srivatsava
கடந்த 40 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவர் ஹிந்தி படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.  
rip
இவருக்கு கடந்த மாதம் ஜிம்மில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்துள்ளார். அதன் காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குணமாகி வீடு திரும்புவார் என்று திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். அவரது திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.