Movie prime

அதிர்ச்சி!! பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கு கொரோனா உறுதி!!

 
k l rahul
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கே.எல் ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி துணை கேப்டன் கே.எல்.ராகுல் இந்தாண்டில் மட்டும் மூன்று முறை காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
k l rahul
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று முடித்த வேளையில் இரண்டு தொடர்களையும் இரண்டுக்கு ஒன்று  என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் கே.எல் ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்ட வேளையில் டி20 தொடரில் அவர் விளையாடுவார் என்று அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரையும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரையும் தவறவிட்டார்.
k l rahul
தற்போது, பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் இந்த தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.