Movie prime

அதிர்ச்சி!! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!! சோகத்தில் திரையுலகம்!!

 
esmail shroff
பிரபல பாலிவுட் இயக்குனர், எஸ்மாயீல் ஷ்ராஃப், ஆந்திர மாநிலம் கர்னூல் நகரில் பிறந்தவர். 62 வயதாகும் இவர், திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சவுண்ட் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். மேலும், இவர் பீம் சிங்கிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
esmail shroff 1.jpg
பின்னர் 1977 ஆம் ஆண்டு வெளியான ‘அகர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து, 1980 ஆம் ஆண்டு வெளியான ‘தோடிசி பெவாஃபை’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
rip
இயக்குநர் எஸ்மாயீல் ஷ்ராஃப் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே காலமானார். இயக்குநர் எஸ்மாயீல் ஷ்ராஃப் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், அவரது ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.