Movie prime

அதிர்ச்சி!! பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்!!

 
atlas ramachandran
பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான அட்லஸ் ராமச்சந்திரன் காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவருக்கு வயது 80. இவர் அட்லஸ் ஜூவல்லரி என்ற நகைக்கடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் பல வருடங்களாக நடத்தி வந்தார். மேலும், இவர் பல மலையாளத் திரைப்படங்களை தயாரித்துள்ளார் .
atlas ramachandran
இவரது தயாரிப்பில் உருவான திரைப்படங்களில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல பிரபல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர். பல வெற்றி படங்களை தயாரித்ததன் மூலமாக பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்களின் நன்மதிப்பை பெற்றவர்.
atlas ramachandran
இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அட்லஸ் ராமச்சந்திரன் துபாயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவரின் மறைவை உறுதி செய்துள்ளனர்.
rip
இந்நிலையில், அவருக்கு திரைப்பட திரையுலகினர் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது .