Movie prime

அதிர்ச்சி!! பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை!! சிக்கிய காதலன்!!

 
vaishali
பிரபல சீரியல் நடிகை வைஷாலி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர், வைஷாலியின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக வைஷாலி கைப்பட எழுதிய கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது.
vaishali
பின்னர், வைஷாலின் காதலன் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்துள்ளார் என்றும், அதனால் மன உளைச்சலில் நடிகை வைஷாலி தற்கொலை செய்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

’மூன்று முடிச்சு’ சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலமான இந்தி சீரியல் நடிகை வைஷாலி தாக்கர். இவர் காதலனின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு,  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இந்தி திரையுலகை அதிர வைத்துள்ளது.
thokku
இவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வைஷாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் விசாரணையில், நடிகை வைஷாலி எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், அவர் முன்னாள் காதலர் அதிக அளவில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் என்றும் அதை தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொள்வதாக நடிகை வைஷாலி குறிப்பிடப்பட்டுள்ளார்.
vaishali
இந்த சமத்துவம் ஹிந்தி திரையுலகில் கடும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நடிகைகள், மாடல் அழகிகள், மற்றும் மாணவிகள் தற்கொலைகள் அதிகமாக நடந்து வருகிறது. இந்த சம்பவங்கள் மக்களை அதிர வைக்கிறது.