Movie prime

அதிர்ச்சி!! பிரபல எழுத்தாளர் செயப்பிரகாசம் மரணம்!!

 
jeyaparakasam
பிரபல எழுத்தாளர் செயப்பிரகாசம் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். 81 வயதாகும் இவர், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், 1971 முதல் 1999-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
jeyaparakasam
காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை போன்ற பல சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள பா. செயப்பிரகாசம், பள்ளிக்கூடம், மணல் என்ற இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். மேலும், சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

பா.செயப்பிரகாசம் தனது மறைவிற்குப் பிறகு எந்த வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என்று வாழ்ந்த போது தனது உறவினர்களிடமும் சக நண்பர்களிடமும் கூறியுள்ளார்.
rip
அதன் காரணமாக, இன்று 25 ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பிறகு பா.செயப்பிரகாசத்தின் உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.