Movie prime

அதிர்ச்சி!! நெடுஞ்சாலையில் கோர விபத்து!! நேருக்கு நேர் மோதிய லாரி, கார்!! 9 பேர் பலி!!

 
accident
கோவா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.
goa mumbai highways
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள கோவா -  மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக சரக்கு லாரி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் லாரி மீது மோதிய காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கி சேதம் அடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
suicide
அங்குள்ள மருத்துவர்கள் அவர்கள் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதிகாலையில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.