அதிர்ச்சி!! ஈரோடு அருகே தெருக்கூத்து கலைஞர் நாடகத்தில் கூத்து ஆடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!!
Jul 20, 2022, 07:10 IST

ஈரோடு அருகே தெருக்கூத்து நாடகத்தில் கூத்து ஆடிக்கொண்டிருந்த கலைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகளை கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குப்பன் துறை கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரணியன் தெருக்கூத்து நாடகம் நடைபெற்று வந்தது. இந்த தெருக்கூத்து நாடகத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜய்யன் என்பவர் வேடமிட்டு நடித்து வந்துள்ளார். நேற்று இரவு நாடகத்தின் போது ராஜய்யன் இரணியன் நாடகத்தில் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக ராஜய்யன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில், தெருக்கூத்து நாடகத்தில் நடிக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.