அதிர்ச்சி!! ஆம்னி பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு!!
Oct 20, 2022, 09:20 IST

வரும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை திகதி முன்னிட்டு பெரும்பாலும் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
எனவே, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பொது மக்கள் கூட்டம் அலைமோதும். பொதுவாக பண்டிகை தினங்களை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் உயரும்.
தற்போது, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த வகையில், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்ல ₹3,000 முதல் ₹3,500 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.