Movie prime

அதிர்ச்சி!! தயிர் சாதத்தில் எலி!! நெய்வேலியில் பரபரப்பு!! 30 பேர் வாந்தி, மயக்கம்!!

 
eli curd rice
சமீப காலமாக தனியார் நிறுவனங்களில் உணவு சேமிப்பது, பரிமாறுவது போன்ற செயல்களில் அதிக அலட்சியம் காட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி, பல உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சியைப் பயன்படுத்தி சமைக்கும் உணவுகளும் பரிமாறப்படுகிறது. இதன் காரணமாக, நிறைய இறப்புகளும் நேர்ந்துள்ளது.

அந்த வகையில், தற்போது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன உணவகத்திலும் இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நெய்வேலி, என்எல்சி நிறுவனத்தில் பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் எலி செத்து மிதந்து கொண்டிருந்தது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
rat curd rice
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களுக்கு பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கத்தில் தயாராகும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில், இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 7 யூனிட்டுகள் கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் காலை ஷிப்டில் பணிபுரிந்து வந்தனர்.

அவர்களுக்கு தினமும் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள், கேன்டீனில் காலை உணவு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று காலை எஸ் எம் இ, ஜிடபிள்யூசி பிரிவுகளில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு தயிர் சாதமும், இட்லியும் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒரு சிலருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
hospital
இதையடுத்து, தயிர் சாதம் வைக்கப்பட்ட பாத்திரத்தை சோதனை செய்தபோது,. அதில் ஒரு எலி  இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த உணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம், என்.எல்.சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.