அதிர்ச்சி!! ஏழாம் வகுப்பு மாணவன் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு!!
Oct 2, 2022, 06:54 IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவாலி கிராமத்தை சேர்ந்த கிருபா என்பவர் தனது பைக்கில் வீட்டிலிருந்து கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மதன் என்ற மாணவன் பைக்கின் பின்னால் அமர்ந்து உடன் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரியின் மீது இவர்களின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இதில் பைக் ஓட்டி வந்த கிருபா என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும், பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த மதன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த மக்கள், பொதுமக்கள் படுகாயமடைந்த கிருபாவை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி ஏழாம் வகுப்பு மாணவன் மதன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அங்கு மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூடியுள்ளதால் ஏராளமான அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.