Movie prime

அதிர்ச்சி!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!!

 
M.K.Stalin
தமிழக முதல்வர் ஸ்டாலின், காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கடந்த 12ம் தேதி, அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
stalin
முதல்வர் இந்த வரும் வருகின்ற 15, 16 தேதி கோவை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமருக்கு 'செஸ் ஒலிம்பியாட் 2022'க்கான அழைப்பிதழை நேரில் கொடுத்து, அழைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டில் தனிமையில் இருந்த முதல்வர், சென்னை, காவேரி மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
stalin
முதல்வருக்கு காவேரி மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.