Movie prime

அதிர்ச்சி!! நள்ளிரவில் பயங்கர விபத்து!! 2 பேர் பலி!!

 
suicide
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு வேகமாக சென்று மோதிக்கொள்ளும் நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்து சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் ஆம்னி பேருந்து ஒன்று உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
accident
நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று சென்னையில் இருந்து மார்த்தாண்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சென்றுள்ளது.

அப்போது, உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள புறவழி சாலை அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அந்த பேருந்து வேகமாக மோதி உள்ளது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்த உடனே விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
hospital
அந்த ஆம்னி பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.