Movie prime

அதிர்ச்சி!! ஆவின் பொருட்கள் விலை உயர்வு!! ஜிஎஸ்டி யின் எதிரொலி!!

 
aavin milk
5 சதவீத வரி விதிப்பால் தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ₹50 மற்றும் ஒரு லிட்டர் தயிருக்கு ₹10 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பால் முகவர்கள் நலச்சங்கம்  இன்று அறிவித்துள்ளது.
aavin curd
கடந்த 17 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பருப்பு வகைகள், அரிசி போன்ற தானியங்கள், கோதுமை, மற்றும் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள் போன்ற பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்த விலை உயர்வு அறிக்கை வந்த மறுநாள் அதாவது ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
aavin ghee
இதன் விளைவாக தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் சார்பாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.