Movie prime

அதிர்ச்சி!! மாணவனை கொடூரமாக கொன்ற ஆசிரியர்!!

 
muthappa
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹதாலி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹதாளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், முத்தப்பா எல்லப்பா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
student in treatment
இவர் அந்த பள்ளியில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவனை மண்வெட்டியால் தாக்கி, பள்ளி வளாகத்தின் முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதே பள்ளியில், அந்த மாணவனின் தாயும் வேலை செய்துள்ளார். அவர் முத்தப்பாவை தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கி உள்ளார், முத்தப்பா. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
suicide
இந்த கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், முத்தப்பா தலைமறைவாக உள்ளார். எனவே, காவல்துறையினர் முத்தப்பாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.