Movie prime

அதிர்ச்சி!! தொடரும் சோகங்கள்!! மீண்டும் ஒரு மாணவியின் தற்கொலை!!

 
suicide
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 9 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஒழுங்காக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் மக்கள் மனதில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பள்ளி வளாகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அதனால் கடும் போராட்டங்களும், வன்முறையும் நிகழ்த்து அந்த சம்பவத்தில் இருந்து வெளிவருவதற்கு முன்பாக அடுத்தடுத்து மாணவிகளின் தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது.
suicide
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசன். அவரது இளைய மகள் மோனிஷா  என்பவர் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் பொது தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றதால் நேற்று தீக்குளித்து தற்கொலை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிகழும் மாணவிகளின் தற்கொலைகள், மக்களை கடுமையாக பாதித்து சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.