Movie prime

அதிர்ச்சி!! திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!! வீட்டில் தனிமை!!

 
kanimozhi
திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. அவர்களுக்கு, இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், திமுக எம்.பி., கனிமொழிக்கு கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது.
kanimozhi
தற்போது, 2வது முறையாக மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் தான் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
kanimozhi webp
மேலும், அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.