Movie prime

அதிர்ச்சி!! தக்காளியை தொடர்ந்து பீன்ஸின் விலையும் உயர்ந்துள்ளது!!

 
Beans
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது, அதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினசரி விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
tomato
தினமும் 75 லாரிகளில் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்நிலையில் கோடை மழை, மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் அவற்றின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இவற்றின் வரத்து குறைந்து வருகிறது, அதனால் இந்த காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. சென்னைக்கு தினமும் 10 லட்சம் கிலோ தக்காளி தேவைப்படும் நிலையில், 6 லட்சம் கிலோ தக்காளியே வந்துள்ளது.

இதனால் 1 கிலோ தக்காளியின் மொத்த விலை ₹80 அல்லது ₹90 க்கு விற்கப்படுகிறது, சில்லறை விலையாக ₹100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பீன்ஸ் ஊட்டி மற்றும் கர்நாடகப் பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் கோயம்பேடு சந்தையில் 7 லட்சம் கிலோ பீன்ஸ் தேவைப்படும் நிலையில், 3 லட்சம் கிலோ மட்டுமே வந்துள்ளது. இதனால் 1 கிலோ பீன்ஸ் ₹90 முதல் ₹100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
avarakkai
இதேபோல், அவரைக்காய் ஆந்திர மற்றும் மதுரை பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகிறது. தினமும் கோயம்பேடு சந்தையில் 5 லட்சம் கிலோ அவரைக்காய் தேவைப்படும் நிலையில், 2 லட்சம் கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் 1 கிலோ அவரைக்காய் ₹80 முதல் ₹100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.