Movie prime

மீண்டும் அதிர்ச்சி!! 12 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை!!

 
poison
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து - வாசுகி தம்பதியினர். இந்த தம்பதிக்கு 2 பெண் மற்றும் 2 ஆண் என்று மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளன. காளிமுத்து இறந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், வாசுகி தனது பிள்ளைகளை கூலி வேலை செய்து வளர்த்து வருகிறார்.
mobile
இந்நிலையில், இவருடைய 17 வயது இளைய மகள் தேத்தாகுடி தெற்கு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அதிக நேரம் தொலைபேசியில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்று தெரிகிறது. இதன் காரணமாக, வாசுகி தனது மகளை கண்டித்துள்ளார்.
suicide
இதனால் மாணவி மனமுடைந்து, வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் விஷம் குடித்து மயங்கி உள்ளார். அதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த மாணவியை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு  மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், தாய் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த கதறி அழுதனர். அதன் பிறகு, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
rip
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக நேரம் தொலைபேசியில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மாணவி எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடரும் மாணவிகளின் தற்கொலையால் அரசு அதிகாரிகளும், தமிழக மக்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.