இலங்கையில் அதிர்ச்சி!! வெளிநாட்டிற்கு தப்பியோடினார் இலங்கை அதிபர்!!
Jul 11, 2022, 18:40 IST

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளது இலங்கையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இந்த நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கடுமையாக போராடி வருகின்றனர். உணவு பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், கொதித்தெழுந்த பொதுமக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அரசு மாளிகைகளை கொண்டு வந்துள்ளனர். பொதுமக்களின் போராட்டங்களால் அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் பொதுமக்களிடம் இருந்து தப்பித்து தலைமறைவாகி வருகின்றனர்.

அந்த வகையில், கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியில் இருந்து விலகி, தனது மாளிகையில் இருந்து தப்பி வெளியேறி உள்ளார். தற்போது, அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.