Movie prime

பாம்பு பிடிப்பதில் பிரசித்தி பெற்ற பாம்பு மனிதர், பாம்பு கடித்து உயிரிழந்தார்!!

 
snake man
ராஜஸ்தான் மாநிலத்தில் 20 ஆண்டுகளாக பாம்பு பிடிப்பதில் பிரசித்தி பெரு, பாம்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் வினோத் திவாரி. 45 வயதான அவர் நாகா பாம்பு கடிதத்தில் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் பாம்பு பிடிப்பதை பல ஆண்டுகளாக தொழிலாக செய்து வருபவர், வினோத் திவாரி. கடந்த சனிக்கிழமை அன்று ஒரு நாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
snake man
நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து நின்ற நிலையில், அதை அவருடைய உதவியாளருடன் சேர்ந்து பிடிக்கும் போது அந்த விஷப்பாம்பு அவரது விரலை கடித்து விட்டது. இதை தொடர்ந்து, மயக்கம் வந்து அவர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.