Movie prime

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!!

 
voter list
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தும் செய்வது, முகவரி மாற்றுவது போன்ற திருத்தப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
voter id que
கடந்த 9 ஆம் தேதி வாக்காளர்கள் பெயர் பட்டியலில் திருத்தப் பணிகளுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில், வாக்காளா் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக 7.10 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
vote id
இரண்டாவது கட்டமாக இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்காளர்கள், வழக்கமாக வாக்கு செலுத்தும் வாக்குசாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள நினைக்கும் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.