Movie prime

மாணவர்கள் உற்சாகம்!! நாளை முதல் கோடை விடுமுறை!!

 
School leave
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் முடிந்து நேரடி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

நாளையுடன் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைகின்றது. இந்நிலையில் நாழி முதல் வருகிற ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.