Movie prime

மாணவர்கள் மகிழ்ச்சி!! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
leave
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக  நீலகிரி,கோவை,தேனி மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இன்றும், நாளையும் கோவை, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
rain
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும், தொடர் மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

மழையால் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால், அந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
vaalaparai
இதன் காரணமாக, வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு, ஸ்டேன்மோர் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கனமழை சமயங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிக்கும் மாணவ-மாணவிகள் வந்து செல்லும் சிரமத்தை கருத்தில் கொண்டும் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.