மாணவர்கள் உற்சாகம்!! இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!
Updated: Jan 18, 2023, 09:58 IST

தமிழகத்திலும், புதுவையிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று பல்வேறு பகுதிகளில் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

இன்று ஜனவரி 18 ஆம் தேதி காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து காரைக்கால் கலெக்டர் முஹம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் இன்று கார்னிவெல் விழா நடைப்பெறுகிறது. இந்த விழாவையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் பொங்கல் விழா நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் காரைக்காலில் இன்று கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று இறுதி நாள் விழா நடைபெறுவதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஜனவரி 18 ஆம் தேதி மட்டும் விடுமுறை என ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.