Movie prime

மாணவர்கள் மகிழ்ச்சி!! இனி அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் விடுமுறை!!

 
leave

இன்று முதல் தமிழகத்தில்  1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. மேலும், வரும் ஜூன் 20 ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புகளும், ஜூன் 27 ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புகளும் தொடங்க உள்ளன. இன்று முதல் 20 நாட்களுக்குள் சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறந்த பின் முதல் 5 நாட்களுக்கு முழுவதுமாக நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
School leave
அதிக கட்டணம் வசூலிக்க கூடாது மற்றும் பள்ளி கட்டணத்தை உடனடியாக கட்ட சொல்லி மாணவர்களை நிர்பந்திக்க கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்பட உள்ளது.

இன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு,எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

பள்ளிகள் தொடங்கப்படும்  நேரம்,முடிவடையும் நேரம் எப்போது என்பதை பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
M.K.Stalin
2022-23 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி,டெய்லரிங் டிசைன் போன்ற  தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முடித்து 10 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
education minister
அது மட்டுமின்றி, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டவுடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை புதிதாக சேர வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டத்தை எப்போது தொடங்கலாம் என்று முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும் என்று முதல்வருடன் இன்று பள்ளிகளை ஆய்வு செய்ய உள்ள பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.