Movie prime

மாணவர்கள் மகிழ்ச்சி!! இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்!! துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்!!

 
cycles
இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில், துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வந்தது.
m k stalin cycle
அதிமுக அரசால் கடந்த 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டம் துவக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படாத நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மிதிவண்டி வழங்குவதை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்க உள்ளார்.

நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் சேர்த்து, இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிதிவண்டிகளை வழங்க தொடங்கிய பின்பு அனைத்து பள்ளிகளிலும் படிப்படியாக மிதிவண்டிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.