Movie prime

தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு!!

 
rice
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நெல் தட்டுப்பாடு மற்றும் வெளி நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அதிகரிப்பால் ஒரே மாதத்தில் அரிசி விலை 26 கிலோ மூட்டைக்கு ₹150 முதல் ₹300 வரை அதிகரித்துள்ளது.
rice
நெல் சாகுபடி குறைவாக செய்யப்பட்டதாலும் நெல் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி அதிகரிக்க பட்டதாலும் தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியில் உள்ள அனைத்து வகையான அரிசியின் விலையானது 26 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டைக்கு  அரிசியின் வகை மற்றும் அதன் தரத்துக்கு ஏற்ப கடந்த 1 மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

₹900 க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி அரிசி தற்போது ₹1200 க்கு விற்கப்படுகிறது. ₹1,050 க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி பச்சை அரிசி ₹1,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ₹690 க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி ₹850 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
rice
இது குறித்து, உடனடியாக மத்திய மாநில அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் ஏழை எளிய சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.