Movie prime

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது!! மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி லாவண்யா!!

 
lavanya

 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு  முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது.  

tnpsc

இந்த தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை நடத்தி வருகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த தேர்வை, 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 மாணவர்கள் எழுதினார்கள். இந்த தேர்வின் முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில், முதல்நிலைத் தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த மார்ச் மாதம் 4, 5, 6 ஆம் தேதிகளில் நடந்தது. 

tnpsc exams

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 29 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. 66 காலி பணியிடங்களுக்கான தேர்வில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 

இந்த தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.tnpsc.gov.in/ பக்கத்தில் வெளியிப்பட்டுள்ளது. இந்த தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.