Movie prime

2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி கால அட்டவணை வெளியீடு!!

 
tnpsc
தமிழ்நாடு அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஆண்டு தோறும் தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில், பிறக்க போகும் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகள் குறித்து கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
tnpsc exams
அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 3 மற்றும் 3A  தேர்வு குறித்து கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முதன்மை தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தவிர பல்வேறு பதவிகளுக்கான காலி பணியிடங்கள் மற்றும் அறிவிப்பு வெளியிடப்படும் தேதி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
exams
இது குறித்து மேலும், தகவல்களை பெறுவதற்கு https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.