Movie prime

தமிழக முதல்வர் டெல்லி சென்றார்!! மாலை பிரதமரை சந்திக்க உள்ளார்!!

 
mk stalin and modi
சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட தமிழக முதல்வர், டெல்லி சென்றடைந்தார். அங்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.
draupathi murmu
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதல்வர், இன்று காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். பிறகு 11.30 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று அவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளார்.
pm modi
மாலை 4.30 மணிக்கு பிரதமரை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார். பிரதமரிடம் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்று, தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.
flying flight
தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் முதல்வர், இன்று இரவே சென்னைக்கு திரும்ப உள்ளார்.