Movie prime

தமிழக அரசு அதிரடி!! ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!!

 
money 2
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்  ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வரும் 2026 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு இடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற் போல் பொதுத்துறை நிறுவனமானது ஒப்பந்தப் புள்ளிகள் கோரல் அடிப்படையில் இறுதி செய்யப்பட இருக்கிறது. மேலும் வரும் 4 ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதி உதவியின் அளவு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
medical scheme
மேலும், புற்றுநோய், கணையம் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ உதவித் தொகை கிடைக்கும். மேலும், ஓய்வூதியர்களை சார்ந்து இருக்கும் நபர்களும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்குள் வருவர். காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யும் மாதாந்திர தொகையானது ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களிடம் இருந்து பெறப்படும்.

ஏற்கனவே மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் தொடர்ந்து புதிய காப்பீட்டுத் திட்டத்திலும் இருக்கும். மேலும், அதிகம் தேவைப்படும் பட்சத்தில், பரிந்துரைக் குழுவின் அடிப்படையில் கூடுதல் மருத்துவமனைகள் சேர்க்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.