Movie prime

தமிழக அரசு அதிரடி!! 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது!!

 
School leave
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. தற்போது, இயல்பு நிலை திரும்பி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
kids
மாணவர்களின் கற்றலில் இடையில் ஏற்பட்ட விரிசலை சீராக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் தமிழக அரசால் பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து, தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி, 1 மற்றும் 2 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
kids
இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 2 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
kids
மேலும், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும் படை ஆய்வு செய்து உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.