Movie prime

தமிழக அரசு அதிரடி!! ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை!!

 
online rummy
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடினால் 3 மாதம் சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசின் ஆணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல், விளையாட்டை வழங்குவோரின் செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
online rummy
மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துவதற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவுச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. பணம், பிற பொருட்களை வைத்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் விளையாட்டுக்கான பணப்பரிமாற்றத்தில் வங்கியோ, நிதி நிறுவனமோ ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்த ஆன்லைன் விளையாட்டுக்கும் எதிரான புகார்களை பெற்று தீர்வு காணவும், எந்த நபரையும் நேரில் அழைத்து விசாரிக்கவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனையில் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்றும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேல்முறையீட்டு ஆணையம் அமைக்கப்படும் என்றும் இந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
money 2
மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் விளம்பரம் வெளியிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடினால் 3 மாதம் வரை சிறை தண்டனை அல்லது ₹5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை அல்லது ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டை நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.